அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா?

 

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா?

நியூயார்க்: அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின நபருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின நபரின் கொலை குறித்து உலகம் முழுக்க கறுப்பின மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிளாய்ட் தன்னுடைய காரை நிறுத்திய பின்பும், அவரைப் பிடித்த ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி ஃப்ளாய்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார். இதனால் ஃப்ளாய்ட் மூச்சுத் திணறி கடந்த மே 25-ஆம் தேதி இறந்தார்.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா?

இதனால் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஏப்ரல் மாதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது பிரேதத்தை பரிசோதனை செய்தவர் இத்தகவலை கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஜார்ஜ் ஃபிளாய்டு உயிர் பிரிந்ததற்கு கொரோனா வைரஸ் எந்த வகையிலும் காரணமாக அமையவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.