அதிமுக தொண்டர்களுக்கு ‘பொதுச்செயலாளர்’ சசிகலா கடிதம்!

 

அதிமுக தொண்டர்களுக்கு ‘பொதுச்செயலாளர்’ சசிகலா கடிதம்!

ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளையொட்டி சசிகலா, அதிமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தை நமது எம்ஜிஆர் நாளேடு வெளியிட்டுள்ளது.

அதிமுக தொண்டர்களுக்கு ‘பொதுச்செயலாளர்’ சசிகலா கடிதம்!

அதில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா பொதுச் செயலாளர் என்ற முறையில் எழுதிய கடிதத்தில், தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டுவது என்ற லட்சியத்தை திரையுலகை தாண்டி ,பொது வாழ்விலும், அரசியல் களத்திலும் சாதித்து காட்டியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அவர்கள் அவர் கண்டெடுத்த ஈடு இணையற்ற தலைவியாம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வெற்றிகளின் உச்சத்தில் தூக்கி நிறுத்தினார்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வெற்றிகளின் உச்சத்தில் தூக்கி நிறுத்தினார். உழைப்பும், உண்மையும் , விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும் வாழ்வின் உச்ச நிலையை கடைக்கோடி தொண்டரும் அடைய முடியும் என்பதை மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த இயக்கத்தின் வாயிலாக பல முறை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

அதிமுக தொண்டர்களுக்கு ‘பொதுச்செயலாளர்’ சசிகலா கடிதம்!

சாதி, சமய, வேறுபாடுகளை அப்பாற்பட்டு பல்வேறு உயர் பதவிகளை எட்டுவது என்பது நமது இயக்கத்தில் மட்டுமே சாத்தியமானது. எத்தனையோ நெருக்கடிகளைத் தாண்டி இறுதிவரை சிறுபான்மையினர் நலனை விட்டுக் கொடுக்காத இயக்கத்தை வழி நடத்திச் சென்றவர் நமது அம்மா அவர்கள். இயக்கத்தை மக்கள் இயக்கத்தின் தேவையும், சேவையும் தனக்கு பின்னாலும் தொடர வேண்டும் என்று சட்டமன்றத்தில் உருக்கமாக குறிப்பிட்டார் . நம் அம்மா கழகம் என்ற இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்று எதிரிகளைப் பார்த்து அறைகூவல் விடுத்தார் நம் அம்மா. அந்த சூழ்நிலையை நிரூபித்து காட்ட வேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

அதிமுக தொண்டர்களுக்கு ‘பொதுச்செயலாளர்’ சசிகலா கடிதம்!

அம்மாவின் லட்சியங்களுக்கு உடன் நிற்கும் துணையாக இறுதி வரையிலான என் வாழ்வு அமைந்து விட்டது. இந்த 33 ஆண்டு கால பயணத்தின் நினைவுகளை நினைத்துப் பார்த்துக் கொண்டே என் எஞ்சிய வாழ்நாளை கழித்து விடலாம். என்றாலும், இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இந்த இயக்கம் சிறிதளவும் கீழே இறங்கி விடக் கூடாது என்கின்ற என் உள்ளார்ந்த அக்கறையாலும், என் அன்பு உடன்பிறப்புகளே, உங்களின் அன்பு கட்டளையால் பொது வாழ்வு என்ற வேள்வியில் என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்ள உடன்பட்டேன். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மோடு இருந்தால் நாம் எவ்வாறு உணர்வோமோ அந்த உணர்வோடு நீங்கள் கழகத்தின் தாயின் பரிவு பாதுகாப்பை தொடர்ந்து இனியும் உணரலாம். நம் கண்முன்னால் அம்மா அவர்கள் காட்டிய பாதை விரிந்து கிடக்கிறது .அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனும் ஒப்பற்ற இந்த இயக்கத்தின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும். விழுந்து கிடக்கும் நம் எதிரிகள் எங்கு கோட்டையில் விரிசல் விழாதா?தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என்று எண்ணிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கழகத்தையும், தமிழகத்தையும் கண்கள் என்னை காத்திட புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருநாமத்தின் பெயரால் சூளுரை ஏற்போம். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா கழகத்தின் சார்பில் ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கழக உடன்பிறப்புகள் கேட்டுக்கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக தொண்டர்களுக்கு ‘பொதுச்செயலாளர்’ சசிகலா கடிதம்!

சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை; அவர் அதிமுகவுக்கு உரிமை கொண்டாடமுடியாது என்று முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூறிவரும் நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.