இன்று பாஜகவில் இணைகிறார் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் : அதிர்ச்சியில் கமல்

 

இன்று பாஜகவில் இணைகிறார் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் : அதிர்ச்சியில் கமல்

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார்.

இன்று பாஜகவில் இணைகிறார் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் : அதிர்ச்சியில் கமல்

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்துக்கிடக்கிறார். திமுக – அதிமுக போன்ற பிரதான கட்சிகளுடன் மக்களவை தேர்தலை ஏற்கனவே சந்தித்த கமல் ஹாசன் தற்போது தனது நண்பர் ரஜினியையும் எதிர்கொண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வருகிறார். தொடர்ந்து மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வரும் கமல் ஹாசன் சமீப காலமாக எம்ஜிஆரை தனது அரசியல் பயணத்திற்கு துணைக்கு அழைத்து வந்துள்ளார். இந்த சூழலில் கமல் ஹாசன் கட்சியிலிருந்து மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் பாஜகவிற்கு இன்று தாவுகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இன்று பாஜகவில் இணைகிறார் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் : அதிர்ச்சியில் கமல்

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனப் பொதுச் செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார். கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் அருணாச்சலம்.

இன்று பாஜகவில் இணைகிறார் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் : அதிர்ச்சியில் கமல்

முன்னதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேற்று எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது, நாளை(டிச 25- இன்று ) பாஜகவில் மாற்றுக்கட்சியை சேர்ந்த மிக முக்கிய தலைவர் இணைகிறார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.