“வட்டி தள்ளுபடி அறிவித்து விட்டு வட்டி வசூல் செய்ய அரசாணை” : பி.ஆர்.பாண்டியன் கண்டனம்!

 

“வட்டி தள்ளுபடி அறிவித்து விட்டு வட்டி வசூல் செய்ய அரசாணை” : பி.ஆர்.பாண்டியன் கண்டனம்!

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. அதேபோல் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகளை பாதுகாக்க அரசு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே ஆண்டாங்கரை, ஆலிவலம், பொன்னீரை பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் அரிச்சந்திரா நதி சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பின் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய மாநில அரசுகள் கொரோனா அழிவிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க எந்தவொரு நிவாரண திட்டங்களும் அறிவிக்கவில்லை. கடன் தவணை திரும்ப செலுத்த கால நீட்டிப்பு வழங்குவதாகவும், வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்தார். ஆனால் அறிவிப்பு குறித்தான எழுத்து பூர்வ அரசாணையில் வட்டி கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

“வட்டி தள்ளுபடி அறிவித்து விட்டு வட்டி வசூல் செய்ய அரசாணை” : பி.ஆர்.பாண்டியன் கண்டனம்!

இதனை தொடர்ந்து தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட வட்டியில்லா கடனுக்கு வட்டி கணக்கிட வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் மோசடி நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விவசாயிகள் நலன் கருதி கடன்,வட்டி முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு குறுவை சாகுபடியை ஊக்கப்படுத்த குறுவை தொகுப்பு திட்டம் கேட்டோம் முதலமைச்சர் வழங்க மறுத்துள்ளது வேதனையளிக்கிறது. உபன் வழங்க முன் வரவேண்டும்.

“வட்டி தள்ளுபடி அறிவித்து விட்டு வட்டி வசூல் செய்ய அரசாணை” : பி.ஆர்.பாண்டியன் கண்டனம்!

சட்டத்திற்கு புறம்பாக மேட்டூர் அணை – சரபங்கா இணைப்பு உபரிநீர் திட்டம் என்ற பேரில் இடதுகரையை உடைத்து 80 அடி ஆழத்தில்100அடி அகலத்தில் புதிய ஆறு வெட்டும் பணியை தமிழக பொதுப்பணித்துறை துவங்கி உள்ளது. அணையில் 80 அடி தண்ணீர் நிரம்பும் நிலையில் புதிய ஆறு மூலம் தண்ணீர் கொண்டு சென்று புதிதாக அமைக்க உள்ள ஏரியில் நிரப்பி பாசனப் பகுதிகளுக்கு இறைவை பாசனம் மூலம் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.

இத்திட்டத்தை 2015ம் ஆண்டில் பொதுப்பணித் துறை அறிவித்த போது நமது எதிர்ப்பை கவனத்தில் கொண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தடுத்து நிறுத்தினார். இந்நிலையில் தானே முதலமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் அத்துமீறி செயல்படுவது கண்டனத்திற்குரியது.

இது குறித்து காவிரி டெல்டா மாவட்ட அரசியல் கட்சி தலைவர்கள்,மக்கள் பிரதிநிதிகள் வாய்த்திறக்க மறுப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தேகமளிக்கிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா அழிந்து போகும்.

“வட்டி தள்ளுபடி அறிவித்து விட்டு வட்டி வசூல் செய்ய அரசாணை” : பி.ஆர்.பாண்டியன் கண்டனம்!

ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தில் 2013ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிலையில் 30% பணிகள் முடங்கி உள்ளது. இதனை துரிதப்படுத்தி முடிக்க கால நிர்ண்யம் செய்திட வேண்டும்.

மேலும் பேரழிவை ஏற்ப்படுத்தும் வெட்டுகிளி தாக்குதலை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறிவிட்டது. இதனால் இந்திய விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. போர்க்கால அடிப்படையில் விமானப்படையை பயன்படுத்தி இயற்க்கையான பூச்சி கொள்ளி மருந்துகளை வான் வழியாக ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்திலும் தெளிப்பதின் மூலம் அதனை முழுமையாக அழிப்பதற்கு முன் வரவேண்டும்.

இலவச மின்சாரம் வழங்குவது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவது கண்டிக்கதக்கது.தமிழக அரசு இலவசமாக மின்சாரத்தை வழங்குவதற்க்கான சிலவினத்தை தானே ஏற்றுக் கொண்டுள்ள போது விளக்கம் என்ற பேரில் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டுமென நெருக்கடிக் கொடுத்து திட்டமிட்டு தமிழக விவசாயிகளை அழிக்கத் துடிக்கிறது. இதனை அனுமதிக்க மாட்டோம் விவசாயிகள் உயிரைக் கொடுத்தாவது உரிமையை மீட்போம்” என்றார்.