“பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்” : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!

 

“பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்” :  அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

“பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்” :  அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ” நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி. பாடத்திட்டம் குறைக்கப்பட்ட போதிலும் தேர்வு நடைபெறும். இந்த கல்வியாண்டு பூஜ்யம் கல்வியாண்டாக இருக்க வாய்ப்பில்லை. பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவர் படம் காவியில் இடம் பெற்றது குறித்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு காரணமாக பேராசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்றார்.

“பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்” :  அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!

தமிழகத்தில் கடந்த 7 மாத காலமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அதேசமயம் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவெடுத்த நிலையில், பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டத்தின் சாதகமற்ற பதிலானால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது.

கொரோனா காரணமாக கடந்த 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகி ஆல் பாஸ் போடப்பட்ட நிலையில் இந்தாண்டும் அதற்கான சூழல் அமையுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது குழப்பத்திற்கு தீர்வாகியுள்ளது.