நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 5.2 % சரியும்- மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணிப்பு

 

நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 5.2 % சரியும்- மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணிப்பு

நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.2 சதவீத சரிவை சந்திக்கும் என்று மோதிலால் ஆஸ்வால் நிதி சேவை நிறுவனம் கணித்துள்ளது.

ஜிடிபி 23.9 % சரிவு –
கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ஜிடிபி விகிதம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடந்த 1996 ஆம் ஆண்டில், நாட்டின் ஜிடிபி விகிதம் வெளியிடப்பட தொடங்கியதில் இருந்து இதுவரை காணாத பெரும் சரிவாக 23.9 சதவீத சரிவை கண்டு ஜிடிபி, அதல பாதாளத்தில் விழுந்தது.

நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 5.2 % சரியும்- மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணிப்பு


ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட தொழில்துறை முடக்கத்தால், பொருளாதாரம் இத்தகைய பின்னடவை சந்தித்ததாக துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த சரிவு 2ஆம் காலாண்டிலும் தொடரும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.2 சதவீத சரிவை சந்திக்கும் என்று மோதிலால் ஆஸ்வால் நிதி சேவை நிறுவனம் கணித்துள்ளது.

தொடரும் சரிவு – அடுத்த நிதியாண்டில் 8 % வளர்ச்சி
அந்நிறுவனத்தின் கணிப்பு படி, 2ஆம் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 4.5 சதவீத கூடுதல் சரிவை சந்திக்கும் என்றும், பின்னர் 3ஆம் காலாண்டில் ஜிடிபி 1.3 சதவீதம் வளர்ச்சி பெற்று, 4ஆம் காலாண்டில் 5 சதவீத வளர்ச்சி பெறும் என்றும் கணித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 5.2 % சரியும்- மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணிப்பு


இதன்படி, நடப்பு நிதியாண்டின் முடிவில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, (ஜிடிபி) 5.2 சதவீத சரிவை சந்திக்கும் என்றும் கணித்துள்ளது. எனினும், அடுத்த நிதியாண்டில், ஜிடிபி 8 சதவீத வளர்ச்சியை பெறும் என்று மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

–முத்துக்குமார்