“உங்களால் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தப்பட்டுள்ளனர்” – நடிகர் விஷால் மீது பரபரப்பு புகார்!

 

“உங்களால் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தப்பட்டுள்ளனர்” – நடிகர் விஷால் மீது பரபரப்பு புகார்!

தமிழ்நாட்டில் பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளி பாலியல் விவகாரம் பெரிதும் பேசுபொருளாகியிருக்கிறது. அப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ராஜகோபலன் என்பவர் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. அவரைக் கைதுசெய்து காவல் துறை நீதிமன்ற காவலில் அடைத்துள்ளது. இவ்விவகாரத்தில் பள்ளிக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வளவு நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாத இப்பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன.

“உங்களால் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தப்பட்டுள்ளனர்” – நடிகர் விஷால் மீது பரபரப்பு புகார்!

இதுதொடர்பாக நடிகர் விஷால் தனது ட்விட்டரில், “பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னை கூனி குறுக செய்கிறது. அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோர்களிடம் ஒருவரும், ஒருமுறை கூட மன்னிப்பு கோரவில்லை. இதுபோன்ற குற்றங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என் நண்பர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைக் கேட்டுக் கொள்கிறேன்.

மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியும். குறைந்தது இப்போதாவது மாணவர்களிடம் / பெற்றோரிடம் மன்னிப்பு கோருங்கள். இதைச் சாதிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள்” என்று பதிவிட்டிருந்தார். இப்பள்ளிக்கு பாஜக தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராமும் ஒருவர். அவர் விஷாலுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “முதலில் சினிமா துறையில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களையும், காமுகர்களையும் நீங்கள் கண்டிக்க வேண்டும் விஷால். சினிமா துறைக்குள் புதிதாக வரும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். முன்னணி நடிகைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களைக் கண்டியுங்கள். நீங்களும் உங்களது நண்பர்களும் பெண்களைப் பயன்படுத்திவிட்டு பின் தூக்கியெறிபவர்கள் தானே.

உங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இருக்கிறார்கள். சினிமா துறையில் பாலியல் புகார்களை கூறும் பெண்கள் உங்கள் உதவியை நாடும் போது உங்கள் ஹீரோயிசத்தை அங்கே காட்டுங்கள். உங்களின் தொடர்ச்சியான தொந்தரவால் பல முன்னடி நடிகைகள் தெறித்து ஓடுகின்றனர். அதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.