வைரமுத்துவுக்கு எதிராக களமிறங்கிய காயத்ரி ரகுராம்

 

வைரமுத்துவுக்கு எதிராக களமிறங்கிய காயத்ரி ரகுராம்

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய நாட்படு தேறல் எனும் கவித்தொகுப்பின் ஆறாவது பாடலுக்காக கேரளாவின் இலக்கிய அமைப்பான ஓ.என்.வி விருது வழங்குவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பாடகி சின்மயி தெரிவித்த பாலியல் புகாரில் நீண்ட காலமாக சிக்கி கொண்டிருக்கும் வைரமுத்துவுக்கு எதிராக நடிகை பார்வதி உள்ளிட்ட மழையாள நடிகைகள் பலர் கண்டன குரல் எழுப்பினர். இதன் காரணமாக விருதுகள் குழுவின் பரிந்துரையின்படி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி தெரிவித்துள்ளது. இதற்குபின்புறம் அரசியல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன் இதற்கு சீமான் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைரமுத்துவுக்கு எதிராக களமிறங்கிய காயத்ரி ரகுராம்

அதேசமயம் பாஜக நிர்வாகியான காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்தில், பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் வைரமுத்துக்கு எதிராக உள்ளது. தமிழ் திரையுலகம் ஏன் மௌனமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிந்து மகிழ்வுற்றேன்; ஆனால் அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதைக் கண்டு வருத்தம் சிறிதளவும் இல்லை”சமீபகாலமாக எம் இனத்தின் மீதும், மொழி மீதும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ தனி மனித மாண்புக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில நபர்களை கொண்டு மதம் ,இனம், மொழியாக பிரிவினை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கபட இயலாத போரினை தொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வைரமுத்துவுக்கு எதிராக களமிறங்கிய காயத்ரி ரகுராம்

உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரரசு என்கின்ற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்து விடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும் . தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் எரியட்டும்; அவர்களின் தாகம் தீரட்டும்; குளம் என்பது கானல்நீர்; நீ சமுத்திரம்! என்று கூறியுள்ளார்.