அது எப்படி சூர்யா? உங்க படம் ரிலீஸ் ஆகுறப்ப மட்டும் வாய திறக்குறீங்க? – காயத்ரி ரகுராம்

 

அது எப்படி சூர்யா? உங்க படம் ரிலீஸ் ஆகுறப்ப மட்டும் வாய திறக்குறீங்க? – காயத்ரி ரகுராம்

நீட் தேர்வால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் மனம் பொறுக்காத நடிகர் சூர்யா, நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், கொரோனா அச்சத்தால் காணொளி வாயிலாக வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் மாணவர்களை தேர்வெழுத சொல்கிறது என தெரிவித்திருந்தார். நீதிமன்றத்தை விமர்சித்த சூர்யாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது.

https://twitter.com/gayathriraguram/status/1305482096702447617

சூர்யாவின் அறிக்கையைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், “பொன்மகள் வந்தாள் படம் வெளியான போது ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் பற்றி பேசினார். தற்போது சூரரைப் போற்று பட புரோமோஷனுக்காக தற்போது நீட் தேர்வை பற்றி பேசினார். காங்கிரஸின் வழியையே சூர்யா கையில் எடுத்துள்ளார். நீட் தேர்வு பற்றி அறிந்த படித்தவர்களுடன் விவாதத்திற்கு வாருங்கள், உங்களுக்கு தைரியம் இருந்தால் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவும். இதுபோன்று கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள்.

ராமநாதபுரத்தில் மத பிரச்னை காரணமாக அருண் பிரகாஷ் என்ற இளைஞர் கொல்லப்பட்டபோது எங்கே போனீர்கள்? சூர்யா… சேலத்தில் சாமியார் சிவனடியார் சரவணன் கொல்லப்பட்டபோது எங்கே சென்றீர்கள்? உங்கள் திரைப்படங்கள் வெளியிடும்போது மட்டும் ஏன் குரல் கொடுக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.