• April
    07
    Tuesday

Main Area

Main



திருமாவளவனை ஜோக்கர் என விமர்சித்த காயத்ரி ரகுராம்! கொந்தளித்த விசிகவினர்

திருமா- காயத்ரி ரகுராம்
திருமா- காயத்ரி ரகுராம்

திருமாவளவனை காயத்ரி ரகுராம்,ஜோக்கர் என திட்டியதால் விசிகவினர் கொந்தளித்துள்ளனர். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மற்றும் பாஜக ஆதரவாளரும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் இடையேயான மோதல் கடந்த சில நாட்களாகவே பேசுபொருளாகியுள்ளது. 

 

 

டெல்லி வன்முறை குறித்து கருத்து தெரிவித்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா பேசிய வெறுப்புப் பேச்சுகள்தான் கலவரம் வெடிக்கக் காரணம். போராட்டம் கலவரமாக மாறியதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும். காவல்துறை அதிகாரத்தை உள்துறை அமைச்சகத்திடமிருந்து மாற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" என கூறியிருந்தார். 

இந்நிலையில் திருமாவளவன் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள காயத்ரி ரகுராம்,"ஜோக்கர்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் விசிகவினர் ஒட்டுமொத்தமாக கூடி கொந்தளித்துள்ளனர். காய்த்ரி ரகுராமை கண்டபடி திட்டி, வார்த்தைப் போரை தொடங்கியுள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.