படுத்துக்கொண்டே பிரசாரம் ..! 250 கிலோ எடையுள்ள தீவிரவாதி கைது! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainபடுத்துக்கொண்டே பிரசாரம் ..! 250 கிலோ எடையுள்ள தீவிரவாதி கைது!

அபு அப்துல் பாரி
அபு அப்துல் பாரி

இந்த அதிசயம் நடந்திருப்பது இராக்கில்.ஸ்வாட் என்கிற பெயர் கொண்ட சிறப்பு அதிரடிப்படை,இராக்கின் மொசூல் நகரில் இந்தச் சாதனையைச் செய்து இருக்கிறது. அபு அப்துல் பாரி என்கிற இந்த மாமிசமலையின் எடை 250 கிலோ.

இவன் சாதாரண தீவிரவாதியல்ல.இவன் ஒரு மத போதகன் .ஐ.எஸ் ஐ எஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டவன்.உள்ளூர் இஸ்லானிய  மதபோதகர்களில் ஐஎஸ்.ஐ.எஸ்ஸுக்கு ஆதரவளிக்காதவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதும் அபு அப்துல் பாரியின் வேலை.

நூற்றுக் கணக்கானோர் மரணத்திற்கு காரணமாக இருந்த இவனால் படுக்கையை விட்டு நகரவே இயலாது.இந்த நிலையிலும் படுத்த படியே, இராக்கின் பாதுகாப்புப் பகடைகளுக்கு எதிராக மதவெறிப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறான் அபு அப்துல் பாரி. கடைசியாக நேற்று இராக் ஸ்வாட் படையினர் இவனை அரஸ்ட் செய்திருக்கின்றனர்.கைது செய்யப்பட்ட பிறகும் இந்த மாமிச மலையை சாதாரண போலீஸ் வாகனத்தில் ஏற்ற முடியாததால், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிரேன் உதவியுடன் ஒரு மினி ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு போயினர்.

இவன் ஸ்டார்வார்ஸ் படத்தில் வரும் ஜாபா தி ஹட் என்கிற வேற்றுகிரஹ குண்டு ஜீவனைப் போல இருப்பதால் இவனை ' ஜாபா தி ஜிகாதி' என்றே குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.