“நன்றி மறப்பது நன்றன்று; இங்கிலாந்து செய்ததை மறந்துவிடாதீர்கள்” – இந்தியாவுக்கு கவாஸ்கர் அட்வைஸ்!

“நன்றி மறப்பது நன்றன்று; இங்கிலாந்து செய்ததை மறந்துவிடாதீர்கள்” – இந்தியாவுக்கு கவாஸ்கர் அட்வைஸ்!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ரேபிட் ரெஸ்டில் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. ஆர்டிபிசிஆர் சோதனையிலும் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த பயிற்சியாளர்களுக்கும் தொற்று ஏற்படவே நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக பிசிசிஐ முடிவுசெய்துவிட்டது. இருப்பினும் இருக்கும் ஒரு பயிற்சியாளரைக் கொண்டு நான்காவது போட்டியை வெற்றிக்கரமாக நடத்திமுடித்தது. ஆனால் மான்செஸ்டரில் ஐந்தாவது போட்டி நடைபெறுவதில் சிக்கல் நீடித்தது.

“நன்றி மறப்பது நன்றன்று; இங்கிலாந்து செய்ததை மறந்துவிடாதீர்கள்” – இந்தியாவுக்கு கவாஸ்கர் அட்வைஸ்!

போட்டியைக் கைவிடலாமா வேண்டாம் என பிசிசிஐயும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பேசிக்கொண்டிருக்க பிஸியோதெரபி வல்லுநருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட கைவிட்டு விடலாம் என ஒருமனதாக முடிவெடுத்தனர். இதனால் கடைசி போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஐபிஎல், டி20 உலகக்கோப்பை தொடர்கள் இருப்பதால் இந்தப் போட்டி இப்போதைக்கு நடத்த வாய்ப்பில்லை. ஆகவே அனைத்தும் முடிந்த பின்பே அடுத்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கடைசி போட்டி நடத்த பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

“நன்றி மறப்பது நன்றன்று; இங்கிலாந்து செய்ததை மறந்துவிடாதீர்கள்” – இந்தியாவுக்கு கவாஸ்கர் அட்வைஸ்!

இதேபோன்றதொரு சூழலில் தொடரின் பாதியில் சென்ற இங்கிலாந்து அணி மீண்டும் வந்து தொடரை முடித்துக்கொடுத்த நன்றியை இந்தியா மறக்கக் கூடாது என சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், “2008ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய அன்று கட்டாக்கில் இந்தியா, இங்கிலாந்து இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. இந்தத் தாக்குதலுக்குப்பின் பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக இங்கிலாந்து அணி தாயகம் புறப்பட்டனர். இருப்பினும் அவர்கள் மீண்டும் இந்தியா வந்து டெஸ்ட் தொடரில் விளையாடினர்.

“நன்றி மறப்பது நன்றன்று; இங்கிலாந்து செய்ததை மறந்துவிடாதீர்கள்” – இந்தியாவுக்கு கவாஸ்கர் அட்வைஸ்!

அந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அன்று இங்கிலாந்து மட்டும் மீண்டும் வராவிட்டால் இந்தியாவில் யாரும் கிரிக்கெட் விளையாட முன்வந்திருக்க மாட்டார்கள். நம்மை நம்பி வந்தார்கள். தொடரையும் முடித்துக்கொடுத்தார்கள். அந்த நன்றியை நாம் எப்போதும் மறக்கக் கூடாது. முக்கியமாக அன்று அணியை வழிநடத்திய கேப்டன் கெவின் பீட்டர்சனையும் நாம் மறவக் கூடாது. அவர்களைப் போல் நாமும் ரத்தான கடைசி டெஸ்ட்போட்டியில் மீண்டும் விளையாட வேண்டும். அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முடிந்தபின் இந்திய வீரர்கள் அங்கு சென்று பாக்கியுள்ள 1 போட்டியில் விளையாடி தொடரை முடித்துக்கொடுக்க வேண்டும்” என்றார்.