’ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குத்தான்’ கவாஸ்கர் உறுதியாகச் சொல்லும் அணி எது?

’ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குத்தான்’ கவாஸ்கர் உறுதியாகச் சொல்லும் அணி எது?

ஐபிஎல் திருவிழா இன்னும் சில மணி நேரத்தில் கோலாகலமாகத் தொடங்க விருக்கிறது. கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற விருப்பது தெரிந்த விஷயமே.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம். சென்ற ஆண்டில் ஒரே ஒரு ரன்னில் கோப்பையைத் தவற விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

’ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குத்தான்’ கவாஸ்கர் உறுதியாகச் சொல்லும் அணி எது?

எல்லோரின் கவனமும் சென்னை சூப்பர் கிங்ஸ் மேலேயே உள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, இந்த ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் டீமே வெல்லும் என உறுதிபடக் கூறியுள்ளார். அவர் மட்டுமல்லாது பலரின் கணிப்பும் இந்த ஆண்டு கோப்பை சிஎஸ்கே வுக்கே என்பதுதான்.

’ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குத்தான்’ கவாஸ்கர் உறுதியாகச் சொல்லும் அணி எது?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணிப்பது வேறு விதமாக இருக்கிறது, ‘இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணி மும்பை இண்டியன்ஸ்தான். ஏனெனில், அந்த அணியில் திறமையான வீரர்கள் இருப்பதைப் போலவே, அனுபவம் நிறைந்த வீரர்களும் இருக்கிறார்கள். அதனால், போட்டியின் சிக்கலான நேரத்தில் எப்படி விளையாடுவது என்பதற்கு பல முறை ஆடிய அனுபவம் கைகொடுக்கும்’ என்று தனது வாக்கை மும்பை அணிக்கே என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.

’ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குத்தான்’ கவாஸ்கர் உறுதியாகச் சொல்லும் அணி எது?

கவாஸ்கர் சொல்வதைபோல மும்பை அணி, நிச்சயமாக பலம் வாய்ந்த அணிதான். அணியை மிக நேர்த்தியாகக் கொண்டுச்செல்வதில் வல்லவர் கேப்டர் ரோஹித் ஷர்மா.

மும்பை இண்டியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், பொலார்ட், ஹிர்த்திக் பாண்டியா, இசான் கிஷான் எனப் பட்டாளமே உள்ளது. பவுலிங் எனும்போது பும்ரா எனும் பேராயுதம் மும்பை அணியிடம் உள்ளது. அவர் தவிர்த்து, போல்ட், யாதவ், மெக்லனகன் என நல்ல வரிசை உள்ளது.

’ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குத்தான்’ கவாஸ்கர் உறுதியாகச் சொல்லும் அணி எது?

ஏற்கெனவே, நான்கு முறைகள் ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி மீண்டும் வெல்லும் எனச் சொல்லும் கவாஸ்கரின் கணிப்பு பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.