’கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர் அவர் மட்டும்தான்’ யாரைச் சொல்கிறார் கவாஸ்கர்

’கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர் அவர் மட்டும்தான்’ யாரைச் சொல்கிறார் கவாஸ்கர்

1980 – 90 இந்த இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கு நண்பர்கள் இருந்தால், நிச்சயம் அவர்களில் ஒருவரின் பெயர் கவாஸ்கராக இருக்கும்.

ஆம். தம் குழந்தைக்கு ஒரு கிரிக்கெட் வீரரின் பெயரை வைக்கும் அளவுக்கு பிடித்துப்போனது சுனில் கவாஸ்கரைத்தான். அந்தளவுக்கு பரவலாக வேறு எந்த கிரிக்கெட் வீரரின் பெயரையும் தமிழகத்தில் வைத்ததில்லை. சச்சின் டெண்டுல்கர் பெயர் உட்பட.

’கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர் அவர் மட்டும்தான்’ யாரைச் சொல்கிறார் கவாஸ்கர்

டெஸ்ட் மேட்சின் மன்னன் என்றால் அது கவாஸ்கர்தான். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 34 சதங்களும் 45 அரை சதங்களும் இவரின் சாதனையாக அணி வகுத்துள்ளன. டெஸ்ட் போட்டியில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீரர்.

1983 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை வென்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன். பலருக்கும் முன்னோடி கிரிக்கெட்டர்.

சமீபத்தில் இந்தியா டூடேக்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். அதில் ரொம்பவும் முக்கியமானது அவரின் சக வீரரைப் பற்றியது.  

’கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர் அவர் மட்டும்தான்’ யாரைச் சொல்கிறார் கவாஸ்கர்

”எப்போதுமே நம்பர் 1 வீரர் என்றால் அது கபில்தேவ்தான். கிரிக்கெட்டில் பல துறைகளில் அவரால் விளையாட முடியும். சிறப்பாக பந்து வீசுவார். அதிரடியாக பேட்டிங் செய்வார். கபில்தேவ் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்து அந்த ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிவிடுவார். அதேபோல பீல்டிங்கும் சிறப்பாகச் செய்வார். கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர் என்றால் அவர் கபில்தேவ்தான்’ என்று பாராட்டி, பழைய விஷயங்களை நினைவு கூறியிருக்கிறார்.

’கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர் அவர் மட்டும்தான்’ யாரைச் சொல்கிறார் கவாஸ்கர்

சக வீரரைப் பாராட்டுவது குறைந்துகொண்டே வரும் நிலையில் கபில்தேவ் பற்றி கவாஸ்கர் கூறியிருப்பது பலரையும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

உண்மையில் கவாஸ்கரின் பாராட்டுக்கு முழு தகுதியானவர் கபில்தேவ். அவரால்தான் உலகக்கோப்பை இந்தியாவுக்கு முதன்முதலாகக் கிடைத்தது. அந்த இறுதிப் போட்டியில் கபில்தேவ் எடுத்தது ஒரு விக்கெட். அதுவும் ஒரு பவுலரின் விக்கெட்தான். ஆனால், அவர் வீசியதில் 4 ஓவர்கள் மெய்டன். ரன் சராசரி 1.90தான்.

’கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர் அவர் மட்டும்தான்’ யாரைச் சொல்கிறார் கவாஸ்கர்

அதாவது ஒரு ஓவருக்கு இரண்டு ரன்கள் கூட கொடுக்கவில்லை. அதுவும் இறுதிப்போட்டியில் எனும்போது அவர் பந்துவீச்சின் திறமையைப் புரிந்துகொள்ளலாம்.