Home ஆன்மிகம் காதல், திருமணம் கைகூட கௌரி சங்கர் ருத்திராட்சம்!

காதல், திருமணம் கைகூட கௌரி சங்கர் ருத்திராட்சம்!

சிவசக்தியின் அம்சமான இரண்டு ருத்ராட்சங்கள் இணைந்து இருக்கும் கௌரி சங்கர் ருத்ராட்சம் அணிவதன் மூலம், அம்மை அப்பனை சேர்த்து இருக்கக்கூடிய பலன் தரும்.

‘ருத்ராக்ஷ தாரணாச்ச ச்ரேஷ்டம் ந கிஞ்சித் அபிவித்யதே’ ருத்ராட்சம் அணிந்து கொள்வதைவிட உயர்ந்த புண்ணியம் வேறு எதுவும் இல்லை என்கின்றன ஞானநூல்கள். இப்படியான ருத்திராட்சத்தை அனைவரும் தரித்து, எல்லாம் வல்ல இறைசக்தியைப் பெறலாம் என்று நம் முன்னோர்களும் வழிகாட்டியுள்ளனர்.
ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்கள், வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது. சிவ பெருமான் தன்னை பொன்னால் அலங்கரிக்காமல் ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்துள்ளார் என்றால் அதன் மகத்துவம் அதிகமாகத் தானே இருக்கும்.

ருத்ராட்சம் என்பது சிவப்பெருமானின் கண் என போற்றப்படுகின்றது.
ருத்ரானான சிவனின் அருளை நமக்கு கொண்டுவருவதற்காக ருத்ராட்சம் அணியப்படுகின்றது. ருத்ராட்சத்தைப் பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகின்றது.
காதல், திருமணம் கைகூட கௌரி சங்கர் ருத்திராட்சம்! சிவபெருமான் சதியை விட்டு பிரிந்த துயரில் இந்த உலகத்தையே மறந்து துறவரம் மேற்கொண்டு, தவத்தில் ஆழ்ந்திருந்தார். மீண்டும் தேவி பார்வதியாக அவதரித்து

சிவப்பெருமானின் மீது காதல் கொண்டு அவரை அடைவதற்காக கடும் தவம் மேற்கொண்டார். தேவியின் தீவிர தவத்தின் பலனாக, நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தேவிக்கு தன்னுடைய காதல் பரிசாக ருத்ராட்சத்தை கையில் கட்டினார்.
என்னை மீண்டும் இந்த துற வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்து, சக்தியுடன் இணைய வைத்த இந்த ருத்ராட்சத்துக்கு கௌரி சங்கரம் என அழைக்கப்படும் என்று சிவப்பெருமான் அருளினார். இந்த ருத் ராட்சத்தை அணிபவர்கள் காதல் தோல்வி, திருமணம் ஆகி கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து ஒருவருடன் ஒருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்தது இந்த கௌரி சங்கர் ருத்ராட்சம். ஓம் நமசிவாய!

-வித்யா ராஜா

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் மேலும் என்னென்ன தளர்வுகள்? முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 28ஆம்...

குஜிலியம்பாறையில் தொழிற்பேட்டை : தமிழக முதல்வருக்கு நன்றி!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமையவுள்ள தொழிற்சாலைக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் வர்த்தக சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட பழைய கரூர்சாலையில் உள்ள குஜிலியம்பாறை...

“இனி வெங்காயத்தை வங்கி லாக்கர்லதான் வைக்கணும்” -வீட்டிற்குள் புகுந்து வெங்காயத்தை திருடிய கூட்டம்

நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து வருவதால் அதை பதுக்கும் வியாபாரிகளுக்கு மத்தியில் அதை திருடும் கூட்டமும் பெருகியுள்ளது .

“ஸ்டாலின் ராசி இல்லாதவர் ; அவரால் முதல்வர் ஆக முடியாது” : அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சனம்!

ஸ்டாலின் ராசி இல்லாதவர் அவரால் முதல்வராக முடியாது என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார். மதுரை கள்ளந்திரியில் அ.தி.மு.க.தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை...
Do NOT follow this link or you will be banned from the site!