விஷத்தை முறித்து, நோய் நீக்கி ஆரோக்கியம் தரும் கருட ஸ்லோகம்!

 

விஷத்தை முறித்து, நோய் நீக்கி ஆரோக்கியம் தரும் கருட ஸ்லோகம்!

விஷ்ணு பகவானின் வாகனமான கருடன் தன் கையில் அமிர்த கலசத்தைத் தாங்கியவராகவும், விஷ பாம்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராகவும் உள்ளார். இவரது இயற்கை குணமே விஷத்தை நீக்குவதாகும். அவரை தினமும் வணங்கி வந்தால் ஆரோக்கியமான வாழ்வையும் அவரது அருளையும் பெறலாம்.

விஷத்தை முறித்து, நோய் நீக்கி ஆரோக்கியம் தரும் கருட ஸ்லோகம்!

ஸ்லோகம்:

அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்

ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்

விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்

ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.

க்ஷிப ஓம் ஸ்வாஹா:

விளக்கம்:

அமிர்த கலசத்தை தன் கையில் தாங்கியவரே, தேவ, தேவியர்களால் வணங்கப்படுபவரே, தன்னுடைய பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவரே. தன்னை வணங்குவோருக்கு ஏற்படக் கூடிய பாம்பு விஷ பாதிப்பை நீக்குபவரே, சக விஷத்தால் ஏற்பட்ட வியாதிகளை நீக்குபவரே,  பறவைகளின் அரசனான கருட பகவானே, உம்மை நான் என் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.