கங்குலி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்? – மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

கங்குலி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்? – மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

கடந்த சனிக்கிழமை முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், இந்நாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவிலுள்ள வுட்லேன்ட்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஒன்பது மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழு அவருக்குச் சிகிச்சையளித்து தீவிரமாகக் கண்காணித்துவந்தது. சிகிச்சையின் முடிவில் கங்குலிக்கு மூன்று இடங்களில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

கங்குலி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்? – மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தேவைப்படும் பட்சத்தில் இன்னும் சில வாரங்களில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வழங்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

கங்குலி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்? – மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

இச்சூழலில், நாளை கங்குலி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இருப்பினும், அவர் வீட்டிலிருந்தபடியே கண்காணிக்கப்படுவார் என்றும் கூறியுள்ளது.