கொரோனாவிலிருந்து மீண்ட நிழலுலக தாதா சோட்டாராஜன்.. எய்ம்ஸிலிருந்து மீண்டும் திகார் சிறைக்கு மாற்றம்

கொரோனாவிலிருந்து மீண்ட நிழலுலக தாதா சோட்டாராஜன்.. எய்ம்ஸிலிருந்து மீண்டும் திகார் சிறைக்கு மாற்றம்

கொரோனாவிலிருந்து குணமடைந்த நிழலுலக தாதா சோட்டாராஜன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து மீண்டும் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

நிழலுலக தாதா சோட்டாராஜன் (வயது 61) கடந்த 2015ம் ஆண்டில் இந்தோனேசியவில் பாலியிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டவுடன் அவரை போலீசார் கைது திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அது முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். 2011ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜே. டே வழக்கில் நீதிமன்றம் 2018ல் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

கொரோனாவிலிருந்து மீண்ட நிழலுலக தாதா சோட்டாராஜன்.. எய்ம்ஸிலிருந்து மீண்டும் திகார் சிறைக்கு மாற்றம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

அண்மையில் சோட்டா ராஜனுக்கு கொரோான இருப்பது உறுதியானதையடுத்து திகார் சிறை நிர்வாகத்தினர் கடந்த 26ம் தேதியன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோட்டா ராஜனை சேர்த்தனர். 2 வாரங்களுக்கு மேல் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை சோட்டா ராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சோட்டா ராஜன் கொரேனாவிலிருந்து குணமடைந்ததையடுத்து நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

கொரோனாவிலிருந்து மீண்ட நிழலுலக தாதா சோட்டாராஜன்.. எய்ம்ஸிலிருந்து மீண்டும் திகார் சிறைக்கு மாற்றம்
திகார் சிறை வளாகம்

கடந்த 7ம் தேதியன்று கொரோனாவால் சோட்டா ராஜன் உயிர் இழந்ததாக சில ஊடகங்களில் வெளியானது. இருப்பினும் எய்ம்ஸ் அலுவலகர்களும், டெல்லி போலீசாரும் அதனை மறுத்தனர். சோட்டா ராஜன் உயிருடன் இருப்பதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.