“தேசிய கட்சிகள் உதவி இல்லாமல் இயங்க முடியாது” – இசையமைப்பாளர் கங்கை அமரன்

 

“தேசிய கட்சிகள் உதவி இல்லாமல் இயங்க முடியாது” – இசையமைப்பாளர் கங்கை அமரன்

தேசிய கட்சிகளின் உதவி இல்லாமல் இந்தியாவில் எந்த மாநிலமும் இயங்க முடியாது என பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரன், “தேசிய கட்சிகளை அனுசரித்துதான் மாநில கட்சிகள் இருக்கும் நிலை தற்போது உள்ளது. தேசிய கட்சிகளின் உதவி இல்லாமல் இந்தியாவில் எந்த மாநிலமும் இயங்க முடியாது. எந்த திட்டத்தை செயல்படுட்த்ஹ வேண்டும் என்றாலும் மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டிய நிலை உள்ளது. பழைய பாரம்பரியத்தையும் தொன்மையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்காகவே பொங்கல் போன்ற விழாக்கள் நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.

“தேசிய கட்சிகள் உதவி இல்லாமல் இயங்க முடியாது” – இசையமைப்பாளர் கங்கை அமரன்

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறி தான் தேசிய கட்சிகள் பயணம் செய்ய முடியும் . தேர்தலில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை. அதனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றார் என்பது குறிப்பிடதக்கது.