’ரேர் பீஸ் சார்’ – சதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடியம் விற்ற கும்பல்

 

’ரேர் பீஸ் சார்’ – சதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடியம் விற்ற கும்பல்

ரேர் பீஸ் சார்… என்று சதுரங்க வேட்டை சினிமா பாணியில், பணக்காரர்களிடம் ஆசைகாட்டி வரவழைத்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்த போலி இரிடியக்கும்பலை தூத்துக்குடி போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பல கோடி ரூபாய் மதிப்புடைய இரிடியம் விற்பதாக கூறி, தூத்துக்குடி வட்டார பணக்காரர்களிடம் ஒரு கும்பல் மோசடி செய்கிறது என்றும், அக்கும்பல் காரிலேயே சுற்றி வருகிறது என்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

’ரேர் பீஸ் சார்’ – சதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடியம் விற்ற கும்பல்

இதையடுத்து நடந்த வாகன சோதனையில், ஒரு இன்னோவார் கார் சிக்கியது. அந்த காருக்குள் ராமநாதபுரத்தை சேர்ந்த முத்து ராமலிங்கம், வைத்தியலிங்கம் இருவரும் இருந்தனர்.

தூத்துக்குடி பகுதியை சேர்ந்த முருகன், மரியதாஸ் ஆகியோரை ’ரேர் பிஸ்’ இருகிறது சென்று சொல்லி, மடக்கியுள்ளதை அடுத்து, அந்த இருவரையும் லாட்ஜூக்கு வரவழைத்து பணத்தை அபேஸ் செய்யலாம் என்று காத்திருந்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
காரில் கத்தி, அரிவாள் மறும் 10 குப்பிகளில் திரவம் இருந்துள்ளது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த 6 குப்பிகளில் இருந்தது இரிடியம் என்றும், கூறியிருக்கிறார்கள்.

’ரேர் பீஸ் சார்’ – சதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடியம் விற்ற கும்பல்

ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் இரிடியம் ஆர்டரின் பேரில் மும்பையில் இருந்து ஜப்பானுக்கு கடந்த 2012ம் ஆண்டு அனுப்பப்பட்டது. அதில் 10 பெட்டிகள் மாயமானது. அந்த 10 பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் 6 குப்பிகள் இருக்கும். ராமநாதபுரம் சாமிநாதனுக்கு கிடைத்திருக்கிறது. அதை விற்றுத்தரச்சொல்லி சாமிநாதன் எங்களிடம் கொடுத்திருக்கிறார் என்று சொன்னதை போலீசார் நம்பவில்லை.

இது போலி கும்பல் என்று தெரிந்துகொண்ட போலீசார், பிடிபட்டவர்களிடம் துருவித்துருவி விசாரித்து வருகின்றனர்.