கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தடை… அங்கு பா.ஜ.க போராட்டம் நடத்துமா என்று தமிழக மக்கள் கேள்வி!

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தடை… அங்கு பா.ஜ.க போராட்டம் நடத்துமா என்று தமிழக மக்கள் கேள்வி!

கர்நாடகாவில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை நிறுவ, ஊர்வலம் நடத்த தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பா.ஜ.க, இந்து அமைப்புகள் கர்நாடகத்தில் அது போன்று கேட்குமா என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தடை… அங்கு பா.ஜ.க போராட்டம் நடத்துமா என்று தமிழக மக்கள் கேள்வி!
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால், எந்த ஒரு மத கொண்டாட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆடிப் பெருக்கு, ஆடி மாத அம்மன் கோவில் திருவிழாக்கள், தமிழ் சித்திரை புத்தாண்டு, பக்ரீத், ரம்ஜான், புனிதவெள்ளி, ஈஸ்டர் என அனைத்தும் இந்த ஆண்டு அவரவர் வீடுகளிலேயே கொண்டாடப்பட்டது.

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தடை… அங்கு பா.ஜ.க போராட்டம் நடத்துமா என்று தமிழக மக்கள் கேள்வி!
வருகிற சனிக்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக நகரின் பல பகுதிகளில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை அமைத்து கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக சிலை அமைக்க பல மாநில அரசுகள் தடைவிதித்து வருகின்றன.
கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசும் கூட கர்நாடகாவில் விநாயகர் சிலை அமைக்க, ஊர்லவம் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தடை… அங்கு பா.ஜ.க போராட்டம் நடத்துமா என்று தமிழக மக்கள் கேள்வி!

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “22ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் எளிமையாகக் கொண்டாட வேண்டும். பொது இடங்களிலோ, வீடுகளுக்கு முன்பாகவோ பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை நிறுவக் கூடாது. மக்கள் வீட்டுக்குள் வைத்து வழிபடும் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லாமல், வீடுகளிலேயே கரைக்க வேண்டும். இதை மீறினால் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளது.

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தடை… அங்கு பா.ஜ.க போராட்டம் நடத்துமா என்று தமிழக மக்கள் கேள்வி!
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நிறுவியே தீருவோம் என்று அடம் பிடிக்கும் தமிழக பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கர்நாடகாவில் சிலை அமைக்க வலியுறுத்துவார்களா? அங்கு கொரோனா பரவும் தமிழகத்தில் மட்டும் பரவாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.