Home இந்தியா பா.ஜ.க கொடியோடு ரஃபேல் விமானத்தில் விநாயகர்! - இதெல்லாம் அவமரியாதை லிஸ்டில் வராதா என நெட்டிசன்கள் கேள்வி

பா.ஜ.க கொடியோடு ரஃபேல் விமானத்தில் விநாயகர்! – இதெல்லாம் அவமரியாதை லிஸ்டில் வராதா என நெட்டிசன்கள் கேள்வி

ஒரு கையில் இந்திய தேசியக் கொடி, மற்றொரு கையில் பா.ஜ.க கொடியோடு ரஃபேல் போர் விமானத்தில் அமர்ந்தபடி பா.ஜ.க அலுவலக பிள்ளையார் காட்சி தந்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக பா.ஜ.க அலுவலகத்திலும் காலையிலேயே விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யப்பட்டன. மாநில தலைவர் எல்.முருகன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


விநாயகரை அவரவர் விருப்பப்படி, உருவாக்கிக்கொள்ளலாம் என்பதால் மருத்துவர், ராக்கெட் விஞ்ஞானி, கிரிக்கெட் வீரர் என்று பலரும் பல ரூபங்களில் விநாயகர் சிலையை உருவாக்குவது வழக்கம். இந்த ஆண்டு பா.ஜ.க அலுவலகத்தில் பிரான்சில் இருந்து சமீபத்தில் இந்தியா வாங்கிய ரஃபேல் போர் விமானத்தில் அமர்ந்திருப்பது போல சிலை வடித்திருந்தனர். மேலும் மாஸ்க் அணிந்து, ஒரு கையில் இந்திய கொடி, மற்றொரு கையில் பா.ஜ.க கொடி என்று வித்தியாசமாக அமைத்திருந்தனர்.


பிரான்சில் இருந்து வாங்கிய ஒரு விமானத்தில்தான் விநாயகர் வர வேண்டுமா என்றும், கையில் பா.ஜ.க கொடியோடு விநாயகர் சிலை அமைக்கப்பட்டதற்கும் சமூக ஊடகங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எப்போது விநாயகர் பா.ஜ.க-வில் இணைந்தார். கடவுளை ஒரு கட்சியின் உறுப்பினர் போல நடத்துவது சரியில்லை என்று பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். இது தங்கள் மத உணர்வை புண்படுத்துவதாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். பா.ஜ.க எதைச் செய்தாலும் சரி, இதையே வேறு ஒரு கட்சி செய்திருந்தால் அவமரியாதை செய்துவிட்டார்கள் என்று பா.ஜ.க கொந்தளிக்கும் என்று எல்லாம் குறிப்பிட்டு வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பைனான்சியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் பைனான்சியர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் ராதாராஜ் நகரை சேர்ந்தவர்...

நிவர் புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு...

சிறுமியை கடத்தி திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது

தர்மபுரி தருமபுரியில் 12ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை...

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி எம்எல்ஏ மனு

திருப்பத்தூர் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம், திமுக எம்எல்ஏ நல்லதம்பி மனு வழங்கினார். அந்த...
Do NOT follow this link or you will be banned from the site!