மக்கள் அதிகம் கூடும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க முடியாது! – உச்ச நீதிமன்றம் உறுதி

மக்கள் அதிகம் கூடும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க முடியாது! – உச்ச நீதிமன்றம் உறுதி

மக்கள் அதிகம் கூடும் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க முடியாது! – உச்ச நீதிமன்றம் உறுதி

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றே தீருவோம் என்று இந்து முன்னணி, எச்.ராஜா உள்ளிட்ட ஒரு சில பா.ஜ.க நிர்வாகிகள் போராடி வருகின்றனர். அதே நேரத்தில் மக்கள் நலன் கருதி பொது ஊரடங்கு உள்ளதால் தமிழக அரசின் அறிவிப்பை ஏற்று வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியைச் சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் மும்பையில் உள்ள ஜெயின் கோவில்களில் ஜெயின் மத விழாவையொட்டி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மும்பையில் உள்ள தாதர், பைகுல்லா, செம்பூரில் உள்ள ஜெயின் கோவில்களை வருகிற 22, 23ம் தேதிகளில் திறந்து வைக்க அனுமதி வழங்கியது. இங்கு தற்காலிகமாக தனிநபர் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி வழிபட அனுமதி வழங்கப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க முடியாது! – உச்ச நீதிமன்றம் உறுதி

அது நேரத்தில் இந்த சலுகை மற்ற எந்த கோவிலுக்கும் பொருந்தாது. விநாயகர் சதுர்த்தி போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது. மக்கள் கூடும் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் மக்களைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். எனவே, அவற்றுக்கு அனுமதி வழங்க முடியாது. கொரோனா பரவல் உள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்தையும் ஏற்க முடியாது என்றனர்.

மக்கள் அதிகம் கூடும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க முடியாது! – உச்ச நீதிமன்றம் உறுதி