பெண் குழந்தைக்கு தந்தையான பிக் பாஸ் பிரபலம்!  | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainபெண் குழந்தைக்கு தந்தையான பிக் பாஸ் பிரபலம்! 

குழந்தையின் விரல்
குழந்தையின் விரல்


சென்னை: கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிகளுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

அபியும் நானும், உன்னைப் போல் ஒருவன், கோ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் கணேஷ் வெங்கட்ராம் . பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனது அமைதியான குணத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 

இவரும் நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான நிஷா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து சமீபத்தில் நிஷா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதுகுறித்த புகைப்படங்களும் அடிக்கடி வெளியிட்டு வந்தனர். 

இந்த நிலையில் கணேஷ் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எனக்கு அழகிய இளவரசி பிறந்துள்ளார். சரியாக இன்று காலை 7.29 க்கு என் மனைவி அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தார். அம்மா மற்றும் குழந்தை இருவரும் நன்றாக உள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு அனைவரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர். 

 

2018 TopTamilNews. All rights reserved.