புதுச்சேரி: பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்கத் தடை!

புதுச்சேரி: பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்கத் தடை!

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு உள்ள நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வருகிற 22ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பலரும் தொடங்கிவிட்டன. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியையொட்டி தெருக்களில் பிரம்மாண்ட சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

புதுச்சேரி: பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்கத் தடை!
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு உள்ள நிலையில் விநாயகர் சிலை வைக்க வேண்டாம் என்று பொது மக்கள், இந்து அமைப்புகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்கத் தடை!
பொது மக்கள் கூடும் இடங்கள், பொது இடங்களில் புதிதாக விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்தப்பட்டு மக்களுக்கு பிரசாதம் வழங்கக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இப்படி சிலைகள் அமைக்கப்படுவதைத் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகர் கோவில்களிலும் கூட விநாயகர் சதுர்த்தியன்று பிரசாதங்கள் வழங்கக் கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது.