விநாயகரிடம் வேலையை காமித்த வைரஸ் -மும்பை மக்கள் எடுத்த முடிவால் பலர் பாதிப்பு ..

விநாயகரிடம் வேலையை காமித்த வைரஸ் -மும்பை மக்கள் எடுத்த முடிவால் பலர் பாதிப்பு ..

மும்பை நகரத்தில் விநாயகர் சதுர்த்தியின் வழக்கமான பந்தல் அலங்காரங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இந்த ஆண்டு எங்குமே காணவில்லை .அதற்கு பதில் கொரானா விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் சுகாதார முகாம்கள் மும்பை முழுவதும் நிரம்பியுள்ளது.

விநாயகரிடம் வேலையை காமித்த வைரஸ் -மும்பை மக்கள் எடுத்த முடிவால் பலர் பாதிப்பு ..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், 10 நாள் கணேஷ் திருவிழா மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் சனிக்கிழமை தொடங்கியது, இருப்பினும் இந்த ஆண்டு வழக்கமான ஆடம்பரத்தையும் உற்சாகத்தையும் எங்குமே காணவில்லை.
விநாயகர் சிலைகளை நிறுவி,அதை மூழ்கடிப்பதற்கு முன் அதற்கான ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு இந்த கொண்டாட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மும்பையில் நிறுவப்படும் கணேஷ் சிலைகள் முறையே நான்கு அடிஉயரம் மற்றும் இரண்டு அடி அகலம் இருக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.இதன் விளைவாக, தங்கள் வீடுகளில் நிறுவுவதற்காக கணபதி சிலைகளை வாங்க கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. திருவிழாவின் வழக்கமான உற்சாகம் இந்த ஆண்டு மிக குறைவாக இருந்தது.

விநாயகரிடம் வேலையை காமித்த வைரஸ் -மும்பை மக்கள் எடுத்த முடிவால் பலர் பாதிப்பு ..

இப்படி மும்பை மக்கள் வெளியே வராமல் எடுத்த முடிவின் காரணமாக, மலர் விற்பனையாளர்கள், இனிப்பு கடைகள், அலங்கார பொருட்களை விற்கும் விற்பனை நிலையங்கள், கவரிங் நகைகள், டிரான்ஸ்போர்ட்டர்கள் மற்றும் போக்குவரத்துதுறை உட்பட பலரையும் பாதித்தது.இதனால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர் .