ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவர் உடல்!

 

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவர் உடல்!

தேனியில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டி உடலை உறவினர் தள்ளுவண்டியில் கொண்டுசென்று அடக்கம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் 14வது வார்டு கூடலூர் அழகுபிள்ளை தெருவை சேர்ந்த 88 வயது மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூதாட்டிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து வீட்டில் உடம்பு முடியாத நிலையில் இருந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவர் உடல்!

இந்நிலையில் மூதாட்டி இறந்தவுடன் மூதாட்டியை வீட்டில் வைக்க அக்கம்பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வர தாமதமானது. இதனால் அக்கம்பக்கத்தினரின் எதிர்ப்பை தாங்க முடியாத மூதாட்டியின் பேரன் உடையாளி என்பவர் மருத்துவ அதிகாரிகளின் அறிவுரைப்படி கொரோனாவால் இறந்தவர்கள் அடக்கம் செய்யும் முறைப்படி அனைத்து பாதுகாப்புடன் கூடிய உடலை பேக்கிங் செய்து வீட்டிலிருந்து தள்ளுவண்டியில் சுடுகாட்டிற்கு சென்று அடக்கம் செய்துள்ளார்.