காந்தியடிகளின் கொள்ளு பேரன் கொரோனாவுக்குப் பலி

 

காந்தியடிகளின் கொள்ளு பேரன் கொரோனாவுக்குப் பலி

இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர் காந்தியடிகள். அதனால்தான் தேச தந்தை என்று போற்றப்படுகிறார். காந்தியடிகள் எங்கு சென்றாலும் அங்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடியவர். தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டங்கள் நமக்குத் தெரியும்.

காந்தியடிகளின் கொள்ளு பேரன் கொரோனாவுக்குப் பலி

காந்தியடிகளின் மனைவி கஸ்தூர்பா காந்தி. இவர்களுக்கு ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவ்தாஸ் என நான்கு பிள்ளைகள். இவர்களில் மணிலால் என்பவர் தென்னாப்பிரிக்காவில் தங்கிவிட்டார். அங்கு திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை வாந்தார். அவரின் பேரன் சதீஷ் துபேலியா தற்போது கொரோனாவுக்குப் பலியாகியுள்ளார்.

சதீஷ் துபேலியா பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால், தனது தொழில்முறையை வீடியோ மற்றும் போட்டோ ஆகியவற்றோடு அமைத்துக்கொண்டார். பல்வ்வேறு சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

காந்தியடிகளின் கொள்ளு பேரன் கொரோனாவுக்குப் பலி

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரது சகோதரி உமா, “கொரோனா தொற்றால் சதீஷ் துபேலியா மரணம் அடைந்துவிட்டதாக’ சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.