‘கிசான் திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு’ இதுவரை 80 பேர் சஸ்பெண்ட்: சுகன்தீப் சிங் பேட்டி!

‘கிசான் திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு’ இதுவரை 80 பேர் சஸ்பெண்ட்: சுகன்தீப் சிங் பேட்டி!

கிசான் திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும் 80 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரதமரின் கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது அம்பலமானது. அதன் படி எல்லா மாவட்டங்களிலும் அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள், லட்சக்கணக்கான மக்கள் இத்திட்டத்தில் மோசடி செய்ததை கண்டுபிடித்தனர். மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசு உத்தரவிட்டதன் பேரில், பலர் கைது செய்யப்பட்டும் மோசடி செய்தவர்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திரும்பிப்பெறப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் கிசான் திட்ட மோசடி குறித்து வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

‘கிசான் திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு’ இதுவரை 80 பேர் சஸ்பெண்ட்: சுகன்தீப் சிங் பேட்டி!

அப்போது பேசிய அவர், கிசான் திட்டத்தில் இதுவரை ரூ.110 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட 80 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 18 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முறைகேடு செய்தவர்களிடம் இருந்து ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, மற்ற பணத்தை திரும்பப்பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘கிசான் திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு’ இதுவரை 80 பேர் சஸ்பெண்ட்: சுகன்தீப் சிங் பேட்டி!

மேலும், மோசடியில் ஈடுபட்டது எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உண்மையான விவசாயி பாதிக்கப்பட கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் விசாரணைக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்களுக்கு புதிய பாஸ்வோர்டு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.