‘பாலாவுக்காக வக்காளத்து வாங்கும் ஷிவானி’ – ஆத்திரத்தில் கேப்ரியல்லா: அனல் பறக்கும் புரோமோ!

 

‘பாலாவுக்காக வக்காளத்து வாங்கும் ஷிவானி’ – ஆத்திரத்தில் கேப்ரியல்லா: அனல் பறக்கும் புரோமோ!

ஷிவானியுடன் கேப்ரியல்லா சண்டை போடுவது போல இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான 2ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

‘பாலாவுக்காக வக்காளத்து வாங்கும் ஷிவானி’ – ஆத்திரத்தில் கேப்ரியல்லா: அனல் பறக்கும் புரோமோ!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியதும் ரசிகர்களுக்கு எழுந்த முதல் கேள்வி அடுத்த கவின்- லாஸ்லியா யார்? என்பது தான். ஷிவானிக்கும் பாலாவுக்கும் இடையில் ஏதோ இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், பாடகி சுஜி என்ட்ரிக்கு பிறகு இவர்களின் அலப்பறைகள் அதிகமாகி விட்டது. ஆரம்பத்தில் இருந்தே கேபி உடன் இருந்த பாலா, திடீரென ஷிவானி பின் சென்றது கேபிக்கு கோபத்தை உண்டாக்கியது என்பது பல டாஸ்க்கில் வெளிப்படையாக தெரிந்தது.

‘பாலாவுக்காக வக்காளத்து வாங்கும் ஷிவானி’ – ஆத்திரத்தில் கேப்ரியல்லா: அனல் பறக்கும் புரோமோ!

தனது கோபத்தையெல்லாம் ஆஜித்திடம் கொட்டித் தீர்த்து வருகிறார் கேபி. கதையில் இங்கு தான் ஒரு பெரிய டுவிஸ்ட் வைத்தார் பிக் பாஸ். ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற டாஸ்க்கில் பாலாவும் ஷிவானியும் அண்ணன் தங்கை என சொல்லி விட்டார். இது கேபிக்கு சந்தோஷத்தை அளித்தாலும், அவர்கள் ஒன்றாகவே வீட்டுக்குள் சுற்றித்திரிவது கேபியை கடுப்பாக்கியது. இந்த நிலையில், டாஸ்க்கை காரணம் காட்டி ஷிவானியிடம் கேபி சண்டை போடுவது போல புரோமோ வெளியாகியுள்ளது.

‘பாலாவுக்காக வக்காளத்து வாங்கும் ஷிவானி’ – ஆத்திரத்தில் கேப்ரியல்லா: அனல் பறக்கும் புரோமோ!

புரோமோவில், என்னோட நேர்மையை பத்தி நீ கேள்வி கேட்காத என பாலா கேபியிடம் சொல்கிறார். அதற்கு கேபி, நான் எதுமே சொல்லலயே என பதில் அளிக்கிறார். உடனே ஷிவானி இடையில் வந்து, ஹானஸ்ட்டா எதுக்கு பதில் சொல்லணும்னு கேட்க, கடுப்பான கேபி நான் பாலா கிட்டதான் பேசுறேன் உன்கிட்ட பேசல என கோபமாக கூறுகிறார்.

‘பாலாவுக்காக வக்காளத்து வாங்கும் ஷிவானி’ – ஆத்திரத்தில் கேப்ரியல்லா: அனல் பறக்கும் புரோமோ!

அதற்கு ஏன் குரல் உசத்தி பேசுற என ஷிவானி கேட்க, அப்படி தான் பேசுவேன். என்ன பண்ணுவ என திமிராக சொல்கிறார் கேபி. இப்படி ஒரு பக்கம் அனல் பறந்து கொண்டிருக்க, இது என்னடா புது புரளியா இருக்கு என்பது போல இருக்கிறது ரம்யா பாண்டியன் ரியாக்சன். மற்றொரு புறம், வெல்கம் டு பிக் பாஸ் ஹவுஸ் என ரியோ கமெண்ட் செய்வது போல புரோமோ முடிகிறது. ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சு டோய் என நெட்டிசன்கள் இந்த புரோமோவுக்கு கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.