கடந்த 70 ஆண்டுகளாக லடாக்கிற்கு கொடுத்த பணத்தை கொள்ளையடித்த காங்கிரஸ்…. கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு

கடந்த 70 ஆண்டுகளாக லடாக்கிற்கு கொடுத்த பணத்தை கொள்ளையடித்த காங்கிரஸ்…. கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு

கடந்த 70 ஆண்டுகளாக லடாக் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொடுத்த பணத்தை காங்கிரஸ் கொள்ளையடித்தது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி குற்றம்சாட்டினார்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் லேவில் கவுன்சில் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி அங்கு சென்றுள்ளார். லேவில் உள்ள காடுங்லா பாஸ் அருகே சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களுடன் கிஷான் ரெட்டி உரையாடினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

கடந்த 70 ஆண்டுகளாக லடாக்கிற்கு கொடுத்த பணத்தை கொள்ளையடித்த காங்கிரஸ்…. கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு
கிஷன் ரெட்டி

கடல் மட்டத்திலிருந்து 18,600 அடி உயரத்தில் உள்ள கார்டோங்லா-நுப்ரா சாலையில் இடைவிடாமல் உள்கட்டமைப்பை உருவாக்கி வரும் பார்டர் சாலை அமைப்பின் தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. எல்லை பகுதிக்கு அருகே சீனா ஒரு சாலையை உருவாக்கி வருகிறது. எல்லைக்கு அருகில் இந்தியா ஏன் சாலையை உருவாக்கவில்லை? நாம் இங்கே சாலைகள் போட வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக எந்த அரசும் இங்கு நல்ல சாலைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.

கடந்த 70 ஆண்டுகளாக லடாக்கிற்கு கொடுத்த பணத்தை கொள்ளையடித்த காங்கிரஸ்…. கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு
கட்டுமான தொழிலாளர்களை சந்தித்து பேசிய கிஷன் ரெட்டி

லடாக் மக்களிடம் ஒட்டு கேட்க காங்கிரசுக்கு என்ன உரிமை உள்ளது? கடந்த 70 ஆண்டுகளில் லடாக்கிற்கு என்ன கொடுத்தார்கள்? அவர்கள் ஊழல் மற்றும் வம்ச அரசியலையும் கொடுத்தார்கள். காங்கிரஸ் லடாக்கின் மாற்றாந்தாய் போல் நடந்து கொண்டது. லடாக்குக்கு மத்திய அரசு என்ன பணம் கொடுத்தாலும் அதை அவர்கள் கொள்ளையடித்தார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடல் மட்டத்திலிருந்து 18,380 அடி உயரத்தில் உலகின் மிக உயர்ந்த நகரக்கூடிய சாலையாக லேவில் உள்ள கார்டுங்லா பாஸ் உள்ளது. இங்கு வெப்பநிலை பெரும்பாலும் மைனஸாகவும், ஆக்சிஜன் அளவும் குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.