முகேஷ் அம்பானி வாங்கிய நிறுவனம்…. ரூ.478 கோடி நஷ்டத்தை சந்தித்த பியூச்சர் ரீடெயில்…

முகேஷ் அம்பானி வாங்கிய நிறுவனம்…. ரூ.478 கோடி நஷ்டத்தை சந்தித்த பியூச்சர் ரீடெயில்…

பியூச்சர் ரீடெயில் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.477.63 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.

பிக் பஜார், எப்.பி.பி., ஈஸிடே மற்றும் நீல்கிரிஸ் போன்ற பிராண்ட்களுக்கு சொந்தமான நிறுவனம் பியூச்சர் ரீடெயில். குழுமத்தை அண்மையில் இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி கையகப்படுத்தினார். முகேஷ் அம்பானி அந்த குழுமத்தை கையகப்படுத்துவதற்கு முன் அந்நிறுவனத்தின் நிதி நிலவரம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. பியூச்சர் ரீடெயில் நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகள் அதனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

முகேஷ் அம்பானி வாங்கிய நிறுவனம்…. ரூ.478 கோடி நஷ்டத்தை சந்தித்த பியூச்சர் ரீடெயில்…
பியூச்சர் குழுமம்

பியூச்சர் ரீடெயில் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.477.63 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது. மேலும் அதே காலாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் 17.75 சதவீதம் குறைந்து ரூ.4,492.36 கோடியாக குறைந்துள்ளது. இதுதவிர பியூச்சர் ரீடெயில் நிறுவனத்தின் மொத்த செலவினமும் 5 சதவீதம் குறைந்து ரூ.5,006.54 கோடியாக சரிவடைந்துள்ளது.

முகேஷ் அம்பானி வாங்கிய நிறுவனம்…. ரூ.478 கோடி நஷ்டத்தை சந்தித்த பியூச்சர் ரீடெயில்…
முகேஷ் அம்பானி

பியூச்சர் ரீடெயில் நிறுவனம் சென்ற நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.11.29 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 98.44 சதவீதம் குறைவாகும். பியூச்சர் குழுமத்தின் சில்லரை, மொத்த, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் வேர்ஹவுசிங் வர்த்தகங்களை ரூ.24,713 கோடிக்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.