இன்னும் 15 நாட்கள் பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்த தடை இல்லை!

 

இன்னும் 15 நாட்கள் பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்த தடை இல்லை!

சமூக வலைதளங்களுக்கான மத்திய அரசின் புதிய விதிகள் இந்தியாவிலுள்ள நெட்டிசன்களை கடந்த இரு நாட்களாக அலறவிட்டது. எல்லோரும் ஏதோ இன்று தான் உலகத்தின் கடைசி நாள் என்பது போல் ட்விட்டரில் பிரிவு உபச்சாரம் நடத்தினர். குறிப்பாக ட்விட்டருக்கே #IStandWithTwitter என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்யும் நிலைக்கு கொண்டுவந்து விட்டன புதிய விதிகள். சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது தான் ஸ்பெஷாலிட்டி. ஆனால் அதற்குத் தான் புதிய விதிகள் வேட்டு வைத்தன.

இன்னும் 15 நாட்கள் பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்த தடை இல்லை!

சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் போடலாம் என்ற நிலைக்கு வேட்டு வைக்கிறது இந்தப் புதிய விதிகள். புதிய விதிகளின்படி உங்களின் ட்வீட்டோ, போஸ்ட்டோ சர்ச்சைக்குரியதாக இல்லாவிட்டாலும், மத்திய அரசுக்கு அது சர்ச்சையானதாக தெரிந்தால் அந்த ட்வீட்டோ அல்லது அந்த ட்வீட் போட்ட உங்களின் ஐடியோ முடக்கப்படும். அரசு உத்தரவிட்ட அடுத்த 24 மணி நேரத்தில் இது நடந்தே தீர வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை ட்விட்டர் மீதோ பேஸ்புக் மீதோ எடுக்கப்படும்.

இன்னும் 15 நாட்கள் பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்த தடை இல்லை!

இம்மாதிரியான விதிகளை பிப்ரவரி 25ஆம் தேதியே மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பாகப் பதிலளிக்க மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கியது. ஆனால் காலக்கெடு நேற்று முன்தினமே முடிவடைந்துவிட்டதால் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தடை செய்யப்படலாம் என்ற தகவல் தீயாகப் பரவியது. இறுதியாக பேஸ்புக், கூகுள், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசின் விதிகளோடு இணங்குவதாக ஒப்புக்கொண்டன.

இன்னும் 15 நாட்கள் பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்த தடை இல்லை!

ஆனால் ட்விட்டரோ மேலும் மூன்று மாத கால அவகாசம் கேட்டது. வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இச்சூழலில் மத்திய அரசு அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து நிறுவனங்களும் விதிகளை ஒப்புக்கொள்ள கால அவகாசம் வழங்கியிருக்கிறது. அதுவரை அவற்றுக்கு தடை இல்லை.