ஸ்டாலினுக்கு போட்டியாக பிரதமர் மோடி அறிவித்த ரூ.10லட்சம்!

 

ஸ்டாலினுக்கு போட்டியாக பிரதமர் மோடி அறிவித்த ரூ.10லட்சம்!

இந்தியாவில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஸ்டாலினுக்கு போட்டியாக பிரதமர் மோடி அறிவித்த ரூ.10லட்சம்!

இந்நிலையில் தந்தை மற்றும் தாய் ஆகியோரை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்படி, அவர்கள் 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் மற்றும் 23 வயதை அடைந்ததும் PM Caresல் இருத்து ₹10 லட்சம் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்விக்கு கடன் வழங்கப்படும் எனவும் இதற்கான வட்டி PM Caresல் இருந்து செலுத்தப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுமெனவும், பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை மாநில அரசே ஏற்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் அறிவித்தது குறிப்பிடத்க்கது.