விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

 

விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

கடந்த 20 ஆம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையில் சாலையில் இருந்த கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் லட்சுமணன், சுனில் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது லட்சுமணன் விஷவாயு தாக்கி மயங்கி கழிவுநீரில் விழ, அவரை காப்பாற்றச் சென்ற சுனிலையும் விஷவாயு தாக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கழிவுநீரில் இருந்து அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

லட்சுமணன் மற்றும் சுனில் உயிரிழந்தது குறித்து விளக்கம் கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். உயிரிழந்த லட்சுமணன் மற்றும் சுனில் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர், இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.