துயர சம்பவங்களில் உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

 

துயர சம்பவங்களில் உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தில் பல துயர சம்பவங்களில் உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து கொண்டு வரும் நிலையிலும், பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை மாறி எப்போது தமிழகம் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

துயர சம்பவங்களில் உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

கொரோனா ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கு பல்வேறு துயர சம்பவங்களால் பலர் உயிரிழக்கின்றனர். சாலை விபத்து, பாம்பு கடி, யானை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களால் தனது குடும்பத்தினரை பிரிந்து வாடும் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி அளித்து வருகிறார். சமீபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்தது. அதனைத்தொடர்ந்து பல குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.