ஆடி மாத பௌர்ணமி பூஜை – சதுரகிரி மலைக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை!

 

ஆடி மாத பௌர்ணமி பூஜை – சதுரகிரி மலைக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை!

விருதுநகர்

ஶ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் ஆடி மாத பௌர்ணமி பூஜையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பிரதோஷ நாட்கள், பௌர்ணமி மற்றும் அவமாவாசை நாட்களில் பூஜைக்காக மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி முதல், ஆடி மாத பௌர்ணமி பூஜைக்களுக்காக மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியது.

ஆடி மாத பௌர்ணமி பூஜை – சதுரகிரி மலைக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை!

இந்த நிலையில், நேற்று ஆடி மாத பௌர்ணமி என்பதாலும், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதாலும் சதுரகிரி மலைக்கு சுவாமி தரிசனம் செய்ய தமிழகம் முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை அடிவாரப் பகுதியில், மலையேறும் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின், மலையறே அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் குளிக்கக் கூடாது என்றும், கண்டிப்பாக முக கவசம் அணியவும் வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், தரிசனம் முடித்தவுடன் அடிவார பகுதிக்கு திரும்பவும், மலைக் கோவிலில் யாரும் தங்கக் கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தினர்.