வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

 

வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, தினசரி அங்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கர்நாடகாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 90 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவருகின்றனர்.

வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

இந்நிலையில் வரும் பத்தாம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை கர்நாடக அரசு அறிவித்தது.கர்நாடகாவில் மே 10 தேதி முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 14 நாட்கள் அனைத்து தளர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் மூடப்படும் மருத்துவ அவசர சிகிச்சை வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.