‘மே 10ம் தேதி வரை’… 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு!

 

‘மே 10ம் தேதி வரை’… 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு!

இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. முதல் அலையை விட பன்மடங்கு அதிவேகமாக பரவும் இரண்டாம் அலையைக் கட்டுக்குள் கொண்டு வர அந்தந்த மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. குறிப்பாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் தலைநகர் டெல்லியில், ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

‘மே 10ம் தேதி வரை’… 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு!

அதன் பிறகும் பாதிப்பு குறையாத காரணத்தால், முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டது. இதனிடையே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களும், இரவு நேர முழு ஊரடங்கை அமல்படுத்தின. மால்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளன.

‘மே 10ம் தேதி வரை’… 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு!

இந்த நிலையில், கர்நாடகாவில் நாளை இரவு 9 மணி முதல் மே 10 வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக விளக்கம் அளித்திருக்கும் எடியூரப்பா, ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.