அதிகரிக்கும் கொரோனா… முழு ஊரடங்கு அறிவிப்பு!

 

அதிகரிக்கும் கொரோனா… முழு ஊரடங்கு அறிவிப்பு!

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வரத் தொடங்கியது. பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்து வந்ததால் மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்தன. அதே சமயம் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இத்தகைய சூழலில் கேரளா, மகாராஷ்டிரா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதிகரிக்கும் கொரோனா… முழு ஊரடங்கு அறிவிப்பு!

குறிப்பாக கேரளா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் இன்று காலை கேரளா விரைந்தது மத்தியக் குழு. இந்த நிலையில், கேரளாவில் ஜூலை 31 ஆம் தேதி சனிக்கிழமையும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கின் போது அரசு, தனியார் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வங்கிகள் உள்ளிட்ட எந்த சேவையும் இயங்காது என அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்படுவோரின் விகிதம் 11 ஆக உள்ளது. கேரளாவில் மட்டுமே தினசரி பாதிப்பு சதவீதம் 10 சதவீதம் மேல் இருப்பதால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.