விருதுநகர் மாவட்டத்தில் முழு ஊரடங்கா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

 

விருதுநகர் மாவட்டத்தில் முழு ஊரடங்கா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அங்கு நேற்றுவரை 1228 பேர் கொரோணாவால் பாதிக்கபட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 164 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனோ பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 1392 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் முழு ஊரடங்கா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே மின்னல் வேகத்தில் பரவி வருவதால் தொழிலாளர்களை பாதுகாக்கும் நாளை முதல் விருதுநகர் மாவட்டம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்தது. ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை என மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது தவறான தகவல் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணன் விளக்கமளித்துள்ளார்.