ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 26 ஆம் தேதி முதல் ஆக.2 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு

 

ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 26 ஆம் தேதி முதல் ஆக.2 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தளர்வுகளே இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என துணை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 300 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 5,067 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள 2237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 37 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நாள்தோறும் 2500 பேர் வீதம் இதுவரை 47 ஆயிரம் பேருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய தாலுகாக்களில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 26 ஆம் தேதி முதல் ஆக.2 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு
நோய் தொற்று அதிகமான காரணத்தால் வரும் 26.07 .20 முதல் 02.08.20 வரை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்திலுள்ள 28 கிராமங்கள் உட்பட தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தபட உள்ளதாக ( ஸ்ரீவில்லிபுத்தூர் சுகாதார தடுப்பு பொறுப்பு ) துணை ஆட்சியர் முருகன் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்றும் மற்ற கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.