Home இந்தியா புதுச்சேரியில் 31ம் தேதி முதல் செப் 6 வரை முழு ஊரடங்கு அமுல்!

புதுச்சேரியில் 31ம் தேதி முதல் செப் 6 வரை முழு ஊரடங்கு அமுல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசு, செவ்வாய் கிழமை தோறும் முழுபொதுமுடக்கத்தை அமல்படுத்தி வருகிறது. இதனிடையே மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, புதுச்சேரிக்கு செல்ல இபாஸ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு பரவி வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகமிருப்பதாக கண்டறியப்பட்டுள்ள 32 பகுதிகளில் வரும் 31ம் தேதி முதல் செப் 6 வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார். அதன்படி, சண்முகாபுரம், தட்டாஞ்சாவடி, குண்டுப்பாளையம், திலாஸ்பேட், தென்றல் நகர்,ஐயப்பன் நகர், சக்தி நகர், அனிதா நகர்,அய்யனார் கோயில் தெரு(ஓ.கே பாளையம்), புதுச்சேரி சட்டப்பேரவை, தியாகு முதலியார் நகர், முல்லை நகர், பெரியார் நகர்,கங்கையம்மன் கோயில் வீதி,குறிஞ்சி நகர்,மடுவுபேட்,பெத்துச்செட்டிப்பேட்,தில்லை நகர் முதல் வசந்தம் நகர் வரை, புதுநகர், கணுவாப்பேட்டை சாலை சந்திப்பு, ஆர்.கே நகர், பிச்சவீரன்பேட், வாய்க்கால் தெருக்கள் 1, 2, 3, 4, ஜெ.ஜெ.நகர், ரெயின்போ நகர், குமரகுருபள்ளம், கோவிந்தசாலை, செந்தாமரை நகர், சோலை நகர், வைத்திக்குப்பம், முத்தியால்பேட்டை நகரப் பகுதி, முத்தைய முதலியார் தெரு, புனித ரொசாரியோ தெரு, காட்டாமணிக்குப்பம் தெரு, உளவாய்க்கால், தர்மாபுரி & பெருமாள் கோயில் வீதி, பொறையூர் பேட் – புதுநகர், பங்கூர்பேட். ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மருந்தகங்கள், பாலகங்கள் போன்றவை வழக்கம் போல செயல்படும் என்றும் அத்யாவசிய தேவைகளுக்காக மளிகைக் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை” – மாநகராட்சி ஆணையர்

ஈரோடு ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ஆணையர் இளங்கோவன், வடகிழக்கு...

அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

கடந்த 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவாகி, நிவர் புயல் உருவானது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக...

முதுநிலை மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்!

முதுநிலை இறுதி ஆண்டு அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!