மீண்டும் தலைதூக்கும் கொரோனா; இன்றும் நாளையும் முழு ஊரடங்கு!

 

மீண்டும் தலைதூக்கும் கொரோனா; இன்றும் நாளையும் முழு ஊரடங்கு!

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அந்த வகையில் கேரளாவிலும் ஊரடங்கு அமல் ஆகியிருந்த நிலையில் பாதிப்பு சற்று குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையுடன் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

மீண்டும் தலைதூக்கும் கொரோனா; இன்றும் நாளையும் முழு ஊரடங்கு!

இந்நிலையில் கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதாக மத்திய அமைச்சகம் அறிவித்தது. மொத்த பாதிப்பில் கேரளாவில் 31% பதிவாவதால் அங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியது. அதன் படி, பாதிப்பைக் கட்டுப்படுத்த இன்றும் நாளையும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு பேருந்து சேவை, மதுக்கடைகள், வங்கி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என எதுவும் இயங்காது என்றும் ஹோட்டல்கள் பார்சல் சேவையுடன் இயங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், முழு ஊரடங்கிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் கேரளாவில் ஜிகா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.