வரும் 29ம் தேதி முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

 

வரும் 29ம் தேதி முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி கொண்டிருக்கிறது. இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றுள் ஒன்று ஊரடங்கு உத்தரவு. டெல்லியில் கடந்த வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதும், பாதிப்பு கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது.

வரும் 29ம் தேதி முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

அதே போல, கர்நாடகாவிலும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு 150 மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாக இன்று காலை தகவல்கள் வெளியாகின. அதாவது, 15%க்கும் அதிகமாக பாதிப்பு இருக்கும் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 29ம் தேதி முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

இந்த நிலையில், கோவாவில் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாந்த் அறிவித்துள்ளார். ஊரடங்கின் போது பொதுப்போக்குவரத்து, கசினோக்கள், ஹோட்டல்கள், பப்கள் செயல்படாது என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 29ம் தேதி முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக மாநில எல்லை மூடப்படாமல் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 29ம் தேதி இரவு 7 மணியில் இருந்து 3ம் தேதி காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.