‘உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று’ : பூடானில் முழு ஊரடங்கு அமல்!

 

‘உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று’ : பூடானில் முழு ஊரடங்கு அமல்!

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பூடானில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடெங்கிலும் பரவி உலுக்கி எடுத்து வருகிறது. சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், பிற நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளுள் பூடானும் ஒன்று. தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தெரிய வந்ததையடுத்து, பூடானில் நேற்று மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

‘உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று’ : பூடானில் முழு ஊரடங்கு அமல்!

இந்த நிலையில், இன்று பூடானின் 3 பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருப்பதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கை பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய வகை கொரோனாவை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் டிச.23 (இன்று) முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

‘உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று’ : பூடானில் முழு ஊரடங்கு அமல்!

இதன் மூலமாக, கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் கால்நடை தீவனம், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.