அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முழு நீளக் காதல் கதை

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முழு நீளக் காதல் கதை

By subas Chandra bose
வருகிற 2021 ஜனவரி 20-ம் தேதியன்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க இருக்கிறார் ஜோ பைடன். தற்போது 77 வயதாகும் ஜோ பைடன்தான் அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வயதில் அதிபராகப் பதவியேற்கும் முதல் நபர் ஆவார்.இவரது வாழ்க்கை கதை மிகுந்த போராட்டக் களங்களைக் கொண்டது. இதில் காதலுக்கும் இடம் உண்டு. ஒரு சினிமா பார்ப்பது போல இருக்கிறது ஜோ பைடனின் வாழ்க்கைக் கதை.
1942-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் வடகிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள ‘ரஸ்ட் பெல்ட்’ என்ற சிறிய நகரில் பிறந்தவர் ஜோ பைடன். ஜோசப் ராபினெட் பிடன் என்பதுதான் இவரது முழுப்பெயர். இவரது தந்தை பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முழு நீளக் காதல் கதை

மிக எளிய குடும்பத்தில் ஜோ பைடன் மூத்த மகனாகப் பிறந்தார். ஆரம்பத்தில் வசதியோடு இருந்த அந்தக் குடும்பம், ஜோ பைடனின் பிறப்பின்போது கடும் வறுமைக்குத் தள்ளப்பட்டது. பைடனுக்கு ஒரு தங்கை, இரு தம்பிகள். 1950-க்குப் பிறகு அவரது குடும்பம் டெலோவருக்கு குடி பெயர்ந்தது.
ஜோ பைடனுக்கு சிறு வயதிலேயே திக்குவாய் பிரச்சினை உண்டு. இதனால் சக மாணவர்களால் கேலிக்கு ஆளாகினார். தனது இந்தக் குறையை சரி செய்து கொள்ள நீண்ட கட்டுரைகளையும், கவிதைகளையும் மனப்பாடம் செய்து கண்ணாடி முன்பு நின்று சத்தமாக ஒப்புவித்து தனது திக்குவாய் பிரச்சினையிலிருந்து மீண்டுள்ளார் பைடன்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முழு நீளக் காதல் கதை


டெலவர் மாகாணத்தில் அமைந்துள்ள பிரபலமான ஆர்ச்மியர் பள்ளியில் படித்த ஜோ பைடன், தனது கல்விச் செலவுக்காக பள்ளியின் ஜன்னல்களைச் சுத்தம் செய்வது, மைதானத்தில் மண்டிக் கிடக்கும் புதர்களை அகற்றுவது போன்ற வேலைகளைச் செய்துள்ளார்.
1961ஆம் ஆண்டு தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பைடன், டெலவர் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் படித்தார். கூடவே ‘நீலியா ஹண்டர்’ என்ற சக கல்லூரி மாணவியைக் காதலித்தும் வந்தார். சுமார் 4 ஆண்டுகாலம் இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். 1965-ம் ஆண்டு தனது சட்டப்படிப்பைத் தொடங்கிய பைடன் அடுத்த ஆண்டே தனது காதலியான நீலியா ஹண்டரைத் திருமணம் செய்து கொண்டார். பைடன்-நீலியா ஹண்டர் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முழு நீளக் காதல் கதை

1972-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் வாரம், பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதற்காக நீலியா தனது மூன்று குழந்தைகளையும் காரில் அழைத்துச் சென்றார். அப்போதுதான் அந்த பயங்கரம் நடந்தது. சோளக்கதிர்களை சுமந்து வந்த ஒரு பெரிய லாரி நீலியா காரில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நீலியா மற்றும் அவரது 9 வயது மகளான ஏமி இருவரும் உயிரிழந்தனர். மகன்கள் பியூ மற்றும் ராபர்ட் இருவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முழு நீளக் காதல் கதை


இந்த இழப்பை பைடனால் ஜீரணிக்க முடியவில்லை. தற்கொலை செய்வதற்கு கூட முடிவெடுத்தார். பின்னர் தனது மகன்களுக்காக வாழ்வதென்று முடிவெடுத்து டெலவோரிலேயே தங்கிவிட்டார். இதன் பின்னர் அவரது வாழ்க்கையில் இரண்டாவதாக ஒரு கட்டத்தில் மீண்டும் காதல் ஏற்பட்டது. ஆசிரியையான ‘ஜில் ட்ரேஸி’ என்பவரை காதலித்தார். ஜோ பைடனின் முதல் மனைவி நீலியா கார் விபத்தின் போது படுகாயங்களுடன் உயிர்தப்பிய இருவரில், ராபர்ட் பைடன், போதைக்கு அடிமையாகி பிரிந்து சென்று விட, பியூ பைடன், தமது 46வது வயதில் 2015ம் ஆண்டு மூளைப் புற்று நோயால் இறந்தார்.அந்த விபத்து நடந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஜோவின் சகோதரர் இந்த “ஜில்”லை அறிமுகம் செய்து வைத்தார். ஜில் பைடன். அப்போது செனட்டராக இருந்தார். இவர்கள் இருவரும் ஒரு நபரைப் பார்க்க பிலடெல்பியாவில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு சென்ற போதுதான் இந்தக் காதல் மலர்ந்தது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முழு நீளக் காதல் கதை


இந்த “ஜில்” லும் ஏற்கெனவே திருமணமானவர்தான்..அவரது கணவர் கல்லூரி கால்பந்து வீரர் ‘பில் ஸ்டீவன்சன் ‘என்பவர். அவருடன் விவாகரத்தாகி இருந்தார். ஜோ பைடனுடன் ஏற்பட்ட காதல் பற்றி ஜில் பைடன் சொல்கிறார். “அவர் என்னை விட 9 வயது மூத்தவர்.கடவுளே… லட்ச ஆண்டுகள் ஆனாலும் இவரோடு நமக்கு ஒத்துவராது என்று நினைத்தேன். என்னிடம் அவர் 5 முறை காதலைச் சொன்ன பிறகே நான் அவரை ஏற்றுக்கொண்டேன்.” என்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முழு நீளக் காதல் கதை


இந்தக் காதல் ஜோடி 1977-ம் ஆண்டு நியூயார்க் மாநகரில் திருமணம் செய்துகொண்டது. இவர்களது மகள் அஷ்லே 1981ல் பிறந்தார்.தற்போது 69 வயதாகும் ‘ஜில்’ நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றியவர்.ஒரு இளநிலைப் பட்டமும், 2 முதுநிலைப் பட்டங்களும் பெற்றவர். டெலாவேர் பல்கலைக்கழகத்தில் இருந்து 2007ம் ஆண்டு கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார.
ஜில் ட்ரேஸியைப் பற்றி ஜோ பைடன் கூறும்போது ‘தான் மீண்டும் பொதுவாழ்க்கையில் நுழைய ‘ஜில்’ தான் காரணம்’ என்று கூறுகிறார். தனது மனைவியை ‘ஜில்’ என்று அழைக்கும் பைடனை ‘ஜில்’… ஜோ” என்று மட்டுமே அழைக்கிறார்.