ஆண்டிப்பட்டியில் நாளை முதல் முழு ஊரடங்கு!

 

ஆண்டிப்பட்டியில் நாளை முதல் முழு ஊரடங்கு!

ஆண்டிப்பட்டியில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாத் தொற்று குறைந்தது போல தெரிந்தாலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வேகமாகப் பரவி வருவதைக் காண முடிகிறது.

ஆண்டிப்பட்டியில் நாளை முதல் முழு ஊரடங்கு!
மாநிலம் முழுக்க முழு ஊரடங்கு அறிவிக்காமல், இடம் மற்றும் தேவைக்கு ஏற்றார்போல அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் முழு ஊரடங்குக்குப் பிறகே கொரோனா குறையத் தொடங்கியது. இருப்பினும் 1500க்கு மேல் என்ற நிலையில்தான் உள்ளது. 500க்கு கீழ் குறையும்போது ஊரடங்கு நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டியில் நாளை முதல் முழு ஊரடங்கு!
தேனி மாவட்டத்திலும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. சென்னையில் தளர்வு அறிவிக்கப்பட்ட போது தேனிக்கும் தளர்வு அளிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆண்டிப்பட்டியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆண்டிப்பட்டிக்கு மட்டும் 10 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தாசில்தார் சந்திரசேகரன் தலைமையில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் ஆண்டிப்பட்டியில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு கொண்டுவருவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஆண்டிப்பட்டியில் வட்டத்தில் மட்டும் ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.