விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு? – அமைச்சர் – அதிகாரிகள் ஆலோசனை

 

விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு? – அமைச்சர் – அதிகாரிகள் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் நகராட்சிகளில் முதல் கட்டமாக முழு ஊரடங்கை கொண்டுவருவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு? – அமைச்சர் – அதிகாரிகள் ஆலோசனைதமிழகத்தில் முழு ஊரடங்குக்கு இனி வாய்ப்பில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால், தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல மாவட்டங்கள், நகரங்களில் முழு ஊரடங்கு கொண்டு வருவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் 1233 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு? – அமைச்சர் – அதிகாரிகள் ஆலோசனை
இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது, ஊராடங்கை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு? – அமைச்சர் – அதிகாரிகள் ஆலோசனைஇந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு தேவையில்லை என்று அதிகாரிகள் கூறியதாகவும் கொரோனாத் தொற்று அதிகம் உள்ள விழுப்புரம் மற்றும் திண்டிவனம் நகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.