ஶ்ரீவில்லிபுத்தூரில் முழு ஊரடங்கு! – காய்கறி, மளிகைக் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் அவதி

 

ஶ்ரீவில்லிபுத்தூரில் முழு ஊரடங்கு! – காய்கறி, மளிகைக் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் வருகிற சனிக்கிழமை (1ம் தேதி) வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

ஶ்ரீவில்லிபுத்தூரில் முழு ஊரடங்கு! – காய்கறி, மளிகைக் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் அவதி
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதைத் தடுக்க வழிதெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்படி இருந்தும் கொரோனா பாதிப்பு ஏறிக்கொண்டே செல்கிறது.
ஶ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா அதிகரிப்பு காரணமாக இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஶ்ரீவில்லிப்புத்தூர் டவுன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 28 கிராமங்களிலும் இந்த ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

ஶ்ரீவில்லிபுத்தூரில் முழு ஊரடங்கு! – காய்கறி, மளிகைக் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் அவதிகாய்கறி, மளிகைக் கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் மருந்துக் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இப்படி துண்டுதுண்டாக ஊரடங்கை அறிவிப்பதற்கு பதில் நிரந்தர திட்டம் எதையாவது பின்பற்றி கொரோனாவுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.